மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தியாருக்கு 7 வருட கடூழிய சிறை
மட்டக்களப்பில் 9 வயது சிறுமி ஒருவரை இரும்பு கரண்டியால் சூடு வைத்து ஒரு வருடகாலமாக சித்திரவதை செய்த குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 25 வயதுடைய குறித்த பெண்ணுக்கு 15 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 ஆயிரம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த பெண் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை கடந்த 2015 மார்ச் 10 ம் திகதி தொடக்கம் 2016 மார்ச் 10 ம் திகதியான ஒரு வருட காலத்தில் தொடர்ச்சியாக இரும்பு கரண்டியால் சூடு வைத்து மற்றும் வாயில் துணியை அடைத்து அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தண்டனை தீர்ப்பு
இந்த நிலையில் குறித்த சிறுமியின் சித்தியை 2016 காவல்துறையினர் கைது செய்து அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வந்த நிலையில், வழக்கானது 2022ம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி.தர்சிகா ஆகியோர் முன்னிலையாகிய நிலையில் குறித்த நபர் குற்றவாளியாக நீதிமன்றில் 2026 ம் ஆண்டு ஒக்டோபர் 13 திகதி (2026-10-13) அமையாளம் காணப்பட்டதோடு இன்று தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |