இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த்தாக்கம்
நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதனால், டெங்கு நோய் பரவும் ஆபத்து அதிகமுள்ள இடங்களை தொற்று நோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.
அதன்படி 71 அதிக ஆபத்துள்ள ஆரம்ப சுகாதார பிரிவிற்குரிய பகுதிகளை தொற்று நோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.
இந்த பகுதிகளில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணங்களில் அதிக எணிக்கை
அதேபோல் மேல்மாகாணத்தை பிரதிநிதித்துவபடுத்தும் பகுதிகளில் சுமார், 39,784 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது மாகாணங்களின் அடிப்படையில் மிக அதிகமான எணிக்கையாகும்.
மேலும், தொற்றுநோயியல் பிரிவின் கூற்றுப் படி, இந்த ஆண்டின் (2023) டிசம்பர் 31 ஆம் திகதி வரை, மொத்தம் 87,986 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,
அதில் அதிகபட்ச எண்ணிக்கையாக 18,572 வழக்குகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
அதேபோல், இந்த வருடத்தில் (2023) இதுவரை டெங்குவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நாடவடிக்கைகள்
தவிரவும், நவம்பரில் பதிவு செய்யப்பட்ட டெங்கு வழக்குகளின் எண்ணிக்கை 11,498 ஆக இருந்தது,
இதுவே இந்த ஆண்டில் (2023) ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையை பதிவு செய்த மாதமாக காணப்படுகின்றது.
இந்நிலையில், நாட்டில் அதிகரித்து வரும் இந்த டெங்கு நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உரிய காப்பு நாடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு தொற்று நோயியல் பிரிவினால் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.