ஒரே நாளில் அடித்த அதிர்ஷ்டம்..! இரண்டாயிரத்து ஐநூறு கோடிக்கு அதிபதியான நபர்
70 மில்லியன்
கனடாவில் லொத்தர் சீட்டிழுப்பில் 70 மில்லியன் டொலர் ( இலங்கை மதிப்பு - 25,123,966,000.00 ) பணப்பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணம் பிராய்ரிஸ் ( Prairies) ல் இந்த அதிர்ஸ்ட சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
லொட்டோ ஜாக்பொட் லொத்தர் சீட்டிலுப்பில் சில வாரங்களாக முதல் பரிசு வென்றெடுக்கப்படவில்லை இதனால் பரிசுத் தொகை அதிகரித்துச் சென்றுள்ளது.
லொட்டோ ஜாக்பொட் லொத்தர் சீட்டிழுப்பு
இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சீட்டிழுப்பில் ஒருவர் 70 மில்லியன் டொலர் பரிசினை வென்றெடுத்துள்ளார்.
எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள சீட்டிலுப்பில் ஜாக்பொட் பரிசுத் தொகை 50 மில்லியன் டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மில்லியன் டொலர் பரிசுத் தொகைகளை ஆறு பேர் வென்றெடுத்துள்ளனர்.
70 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றெடுத்த நபர் பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.