கல்வியற் கல்லூரி அனுமதியை எதிர்பார்த்திருப்போருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
கல்வியியற் கல்லூரிகளுக்கு (College of Education) இணைத்துக் கொள்ளப்படும் ஆசிரிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், இணைத்துக் கொள்ளப்படும் ஆசிரிய மாணவர்களின் எண்ணிக்கை 5,000இல் இருந்து 7,500 வரை உயரும் எனக் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள (Ministry of Education) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வியியற் கல்லூரி
அத்துடன், இலங்கையில் உள்ள 19 கல்வியியற் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இதேவேளை, கல்வி சீர்திருத்தச் செயற்பாட்டுக்கமைய, கொரியா (Korea) , ஜேர்மன் (German) , பிரான்ஸ் (French) , ஹிந்தி (HIndi) மற்றும் ஜப்பான் ஆகிய மொழிகளுக்கான ஆசிரியர்களைப் பாடசாலை கட்டமைப்புக்குள் இணைத்துக் கொள்வதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |