இந்த வருடம் பதிவாகிய துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Gun Shooting
By Kathirpriya
இந்த ஆண்டில் (2023) இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 77 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 06 வயது சிறுமி உட்பட மொத்தமாக 46 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாட்டிற்குள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்த காவல்துறை தலைமையகம், தென் மாகாணத்திலேயே அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இச்சம்பவங்களில் 35 பேர் காயமடைந்து வெவ்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்