மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By Luxshan
மோட்டார் சைக்கிள் ஒன்றின் வேகம் கட்டுப்பாட்டை இழந்ததில், வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் அச்சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (05) மதியம் பொத்துவில் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொத்துவில் - பாணம வீதியின் பசரச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் சிறுவனும் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 8 வருடங்களும் 10 மாதங்களும் வயதான சிறுவன் ஆவார்.
சம்பவம் தொடர்பில் பொத்துவில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்