யாழ். புத்தூர் பகுதியில் கோர விபத்து - 21 வயது இளைஞன் பலி: 2 பேர் கவலைக்கிடம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Jaffna Teaching Hospital
Accident
By Thulsi
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிந்துள்ளார்.
மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் திடீரென குறுக்கே சென்ற முச்சக்கர வண்டி மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணம் செய்த மூவரில் ஒருவர் நள்ளிரவு உயிரிழந்துள்ளார்.
விசாரனை
டிப்பர் முச்சக்கர வண்டியின் மீது ஏறியதில் அதில் பயணம் செய்த மூன்று இளைஞர்களும் கால் நசுங்கி படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவர்களில் 21 வயதுடைய புத்துரைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான விசாரனைகளை அச்சுவேலி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்