உயர்தர பெறுபேறு : பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட தகவல்
வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி 9904 பேர் மூன்று பாடங்களிலும் "ஏ" சித்திகளைப் பெற்றுள்ளனர்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
சித்தி பெற்றோர் விபரம்
இதன்படி உயிரியல் பிரிவில் 817 பேர், கணிதத் துறையில் 1088 பேர், வணிகவியல் பிரிவில் 4198 பேர், கலைப் பிரிவில் 3622 பேர், பொறியியல் தொழில்நுட்பத் துறையில் 90 பேர், உயிரியல் தொழில்நுட்பத் துறையில் 73 பேர், மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 36 பேர் என அவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார்.

2022 (2023) ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரர்களில் 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவ்வாறு தகுதி பெற்றவர்களில் 149,487 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 17,451 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.