15 வயதுடைய சிறுமி கடத்தப்பட்டார்
Anuradhapura
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Jaso
15 வயதுடைய சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுமி நேற்று (30) அதிகாலை 1.00 மணியளவில் தனது வீட்டில் இருந்த போது கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாலைவேளை கடத்தல்
அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் திவுல்வெவ காவல்துறையினர் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
காவல்துறை எடுத்த நடவடிக்கை
ஆனால் கடத்தப்பட்ட சிறுமி குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

திவுல்வெவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மரண அறிவித்தல்