இலங்கையில் பதிவான பறவைக் காய்ச்சல் தொற்று
Bird Flu
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Laksi
இலங்கையில் (Sri Lanka) பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
குறித்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபர் வெளிநாட்டை சேர்ந்த ஆண் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நோயாளி இன்புளுவென்சா எனப்படும் சளி காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பறவைக்காய்ச்சல் தொற்று
இதன் படி, இந்த நபருக்கு பி.சி.ஆர் பரிசோதனையில் இன்ப்ளூயன்ஸா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல், ஏவியன் இன்ப்ளூயன்ஸா என்றும் அழைக்கப்படுகிறது. இது மனிதர்களைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை இன்ப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படுகிறது.
இதேவேளை, பறவைக்காய்ச்சல் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கைக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்