போதைப்பொருளுக்கு அடிமையான காவல்துறை பயிலுனர் - எடுக்கப்பட்ட முடிவு
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பயிலுனர் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர் கொழும்பு போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளினால் இந்த கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனை செய்யும் இடம் சுற்றிவளைப்பு

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் காவல்துறை குழுவொன்று சேதாவத்தை பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யும் இடத்தை சுற்றிவளைத்த போது, அங்கு தங்கியிருந்த புதிய காவல்துறை கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபத்தான போதைப்பொருள் பாவனைக்கு அடிமை

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான புதிய காவல்துறை கான்ஸ்டபிள் கொழும்பு சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, ஆபத்தான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.