பேராபத்தில் சிக்கியிருக்கும் பிரபல ஐரோப்பிய நாடு
கொவிட் தொற்றும் ப்ளூ காய்ச்சலும் பரவிச் செல்லும் நேரத்தில் ஜேர்மனில் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த வைத்தியர்கள் தங்களுக்கு வேலைப்பழு அதிகரித்துவருவதாகவும், செலவுகள் அதிகமாகவும், வருவாயோ குறைவாகவோ இருப்பதாகவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் இந்த வேலைநிறுத்தம் எதற்காக என்பது புரியவில்லை என ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Karl Lauterbach தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு பாதிப்பு
அத்தோடு, மக்களிடையே பெருமளவில் நோய்த்தொற்று காணப்படுகிறது, மேலும் மேலும் பணம் வேண்டும் என வைத்தியர்கள் கேட்கிறார்கள்.
இந்த வேலைநிறுத்தத்ததால் எந்த பயனும் இல்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இந்தநிலையில், அமைச்சரின் கருத்தை நோயாளி ஆதரவு அமைப்புக்களும் ஆதரித்துள்ளன.
மேலும், Deutsche Stiftung Patientenschutz என்னும் நோயாளிகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பின் தலைவரான Eugen Brysch என்பவர், “எந்த வேலையிலிருப்பவர்கள் வேண்டுமானாலும் வேலைநிறுத்தம் செய்யலாம்.
பிரச்சினைகள்
ஆனால், இந்த வைத்தியர்களின் வேலைநிறுத்தம் தவறான மக்களை பாதிக்கிறது. இந்த மருத்துவர்கள் அமைச்சர்களிடமும் காப்பீட்டு நிறுவனங்களிடமும் தங்கள் பிரச்சினையைக் கொண்டு செல்லவேண்டும்.
அதைவிட்டுவிட்டு இப்படி வேலைநிறுத்தம் செய்வதால் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |