விண்ணைத் தொடும் பச்சை மிளகாய் விலை : 15ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு பச்சை மிளகாய்
நாட்டில் இன்று (29) பச்சை மிளகாய் ஒன்று 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
பச்சை மிளகாயின் விலை சந்தையில் அதிகரித்துள்ள நிலையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாயின் மொத்த விலை 1,300 முதல் 1,500 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சில்லறை சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1,800 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
பேலியகொட மெனிங் சந்தை
இந்நிலையில் 100 கிராம் பச்சை மிளகாயில் சுமார் 12 காய்கள் உள்ளதாகவும், அதன்படி ஒரு பச்சை மிளகாயின் விலை 15 ரூபாய் என்றும் மக்கள் கூறுகின்றனர்.
பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாயின் மொத்த விலை 2,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இரத்மலானை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் பச்சை மிளகாயின் விலை 1,650 ரூபா முதல் 1,670 ரூபா வரை பதிவாகியுள்ளது.
மரக்கறி விலை அதிகரிப்பு
கெப்பிட்டிபொல பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1200 முதல் 1300 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மிளகாய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்றது.
எனவே அரசாங்கம் இதில் தலையிட்டு மரக்கறிகளுக்கான நிர்ணய விலைகளை வெளியிடுமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |