நாடாளுமன்றம் கலைப்பு : உதயங்க வீரதுங்கவிற்கு பசில் காட்டமான பதிலடி
Basil Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
By Jaso
எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்த கதை தமக்கு தெரியாது என சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவின் நாடாளுமன்றம் கலைப்பு கருத்து தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் வினவியபோதே பசில் ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உதயங்க வீரதுங்கவிடம் தான் கேட்க வேண்டும்
அவரின் கருத்து தொடர்பில் உதயங்க வீரதுங்க(Udayanga Weeratunga)விடம் தான் கேட்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுடனான சந்திப்பு
எவ்வாறாயினும், தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் அதிபர் ரணிலுடனான சந்திப்பின்போது தனது கருத்தை தெரிவித்ததாகவும் பசில் குறிப்பிட்டார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |