உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் எப்போது? அறிவிப்பை வெளியிட்ட கல்வியமைச்சர்
srilanka
a-l-exam
g-l peiris
By Vasanth
இவ்வருடத்துக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகளை கல்வியமைச்சர் இன்று வெளியிட்டுயுள்ளார்.
அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளது. அத்துடன், ஒக்டோபர் 3 ஆம் திகதி ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் இறுதி வாரத்தில் ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்