பல இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களை கடத்த முற்பட்ட ஒருவரை ராகம காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராகம காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வீதித்தடையை பயன்படுத்தி வாகனங்களை சோதனை செய்த போது போதைப்பொருளுடன் வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் ராகம, வல்பொல பட்டலந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, சோதனைக்கு உட்படுத்திய காரில் 102 கிராம் 940 மில்லி கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்டவர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதுடைய 'பாஸ் ரொஷான்' எனவும் இவர் ராகம, கெண்டலியத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக இருக்கும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபர் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் இதற்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்ற உண்மையும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! |