ஈஸ்டர் தீர்ப்புக்குப் பின் நீதிமன்ற வளாகத்தில் எழுந்த கேள்வி: சஹ்ரானின் சைகையுடன் ஒற்றுமை ஏன்...

Sri Lankan Peoples Sri Lanka Magistrate Court
By Dharu Sep 24, 2026 01:43 AM GMT
Report

கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, கொழும்பு மற்றும் மேலும் சில பகுதிகளில் அமைந்திருந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்காகக் கொண்டு, தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

அதன்படி, அந்தத் தாக்குதல்கள் தொடர்பாக சதித்திட்டம் தீட்டுதல், உதவி மற்றும் ஆதரவு வழங்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்க கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு தீர்மானித்தது.

ஏறத்தாழ 6 ஆண்டுகளாக நீடித்த நீண்டகால வழக்கு விசாரணையின் பின்னர், நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷ்ஷங்க ஆகிய நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு ஒருமனதாக இந்தத் தீர்ப்பை அறிவித்தது.

200 ஆண்டுகளுக்கு மேலான சிறை தண்டனை தீர்ப்பை சவால் செய்ய தயாராகும் குற்றவாளிகள்

200 ஆண்டுகளுக்கு மேலான சிறை தண்டனை தீர்ப்பை சவால் செய்ய தயாராகும் குற்றவாளிகள்

ஏதோ ஒரு கையசைவு

அதன்படி, ஈஸ்டர் தாக்குதலை நடத்துவதற்காக தற்கொலைக் குண்டுதாரிகளுடன் சதித்திட்டம் தீட்டுதல், அவர்களுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரையிலான கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஈஸ்டர் தீர்ப்புக்குப் பின் நீதிமன்ற வளாகத்தில் எழுந்த கேள்வி: சஹ்ரானின் சைகையுடன் ஒற்றுமை ஏன்... | A Resemblance To Zahran S Gesture

அந்தக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்தபோது புன்னகைத்த முகத்துடன் காணப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

மேலும், சில குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஒரு விரலை உயர்த்தி ஏதோ ஒரு கையசைவுச் சைகையை காண்பித்ததாகவும் அவதானிக்கப்பட்டது. அதேபோன்று, தீவிரவாத இஸ்லாமிய அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹாஷிமும் இதே விதமாக ஒரு விரலை உயர்த்தி ஒரு கையசைவுச் சைகையை காண்பித்திருந்தார் என்ற கருத்து சமூக ஊடகங்களில் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துள்ளது.

இந்ந வழக்கு சிசாரணையின் போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்ரியா ஜயசுந்தர கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:

“மேன்மைதங்கிய நீதிபதிகளே, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி, அவர்களுக்கு தளர்வான அல்லது இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை.

தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய சஹ்ரான், இன்ஷாஃப் போன்றவர்கள் என்ன கூறினார்கள்?

இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்காக வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை கொல்ல வேண்டும் என்று கூறினார்கள். அந்தப் பாரிய குற்றத்திற்குச் சதித்திட்டம் தீட்டி, உதவி மற்றும் ஆதரவு வழங்கிய இந்தக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இன்னமும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.

ஈஸ்டர் தாக்குதல் சதியின் முழுமையான நீதி கோட்டாபயவுக்கு வழங்கப்படும் தண்டனையே!

ஈஸ்டர் தாக்குதல் சதியின் முழுமையான நீதி கோட்டாபயவுக்கு வழங்கப்படும் தண்டனையே!

குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பிரதிவாதிகள்

இவர்களில் எவரும் இந்தத் தருணத்திலும் வருத்தத்தையோ மனப்பச்சாத்தாபத்தையோ வெளிப்படுத்தவில்லை. இத்தகைய குற்றஞ்சாட்டப்பட்டவர்களை முடிந்தவரை சமூகத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும்.

ஈஸ்டர் தீர்ப்புக்குப் பின் நீதிமன்ற வளாகத்தில் எழுந்த கேள்வி: சஹ்ரானின் சைகையுடன் ஒற்றுமை ஏன்... | A Resemblance To Zahran S Gesture

இத்தகைய தீவிரவாதக் கருத்துகளைக் கொண்டவர்களுக்கு முக்கியமான ஒரு செய்தியை வழங்கும் வகையில், இந்தக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச தண்டனையை வழங்குமாறு நான் கோருகிறேன்.” என்றார்.

இரவு சுமார் 11.00 மணியளவில் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை தொடர்பான உத்தரவை அறிவித்தது.

அதன்படி, 5 குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தலா 200 ஆண்டுகள், மேலும் 5 குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தலா 220 ஆண்டுகள், 4 குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு 240 ஆண்டுகள் மற்றும் ஒரு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 260 ஆண்டுகள் என்ற அடிப்படையில் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், குற்றவாளிகளாகக் காணப்பட்ட அந்த 15 குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையாச் சொத்துகளும் தீர்ப்பு வழங்கப்பட்ட தருணத்திலிருந்து அரசுடைமையாக்கப்படுவதாக மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் 23ஆம் தேதி அதிகாலை சுமார் 2.30 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023