மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை செல்லும் 28 வீதமான பிள்ளைகள் போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அந்தப் பிரதேசத்திலுள்ள பிள்ளைகளின் பாடசாலை வருகையும் கணிசமாகக் குறைந்துள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறுகிறார்.
16 வீதமானோர் போசாக்கின்மையால்
இலங்கையில் பாடசாலை செல்லும் குழந்தைகளில் 16 வீதமானோர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய மருத்துவ சஞ்சிகை ஒன்று தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தில் பெரும்பான்மையான சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குடும்பங்களின் வருமான ஆதாரங்கள் இன்மை
இதற்கு முக்கிய காரணம் குடும்பங்களின் வருமான ஆதாரங்கள் இன்மையால் பொருளாதார பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து அதனை எதிர்கொள்ள முடியாமல் போனதாகும்.
இப்பகுதிகளில் விவசாயமே முக்கிய வாழ்வாதாரமாக இருந்தும், அதுவும் தவறியதால், கடும் நெருக்கடியில் உள்ளனர்.
இந்நிலையில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து உணவு வழங்குமாறு மருத்துவமனைகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அப்பகுதி பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மோசமான போசாக்கு நிலை காரணமாக அப்பகுதிகளில் குழந்தைகளின் சுறுசுறுப்பான நிலையும் குறைந்து வருவதாக ஆசிரியர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |