தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கொன்ற பாதகன் - தானும் தற்கொலை
Sri Lanka Police
Attempted Murder
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மூன்றரை வயதுக் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் தாய்,தனது மூத்த குழந்தையை பாடசாலைக்கு விடுவதற்குச் சென்ற சமயம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கழுத்தை நெரித்து கொலை

குழந்தை கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக மீகஹதென்ன காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மீகஹதென்ன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி