மருத்துவமாணவரை உருவாக்க மக்களிடமிருந்து அறவிடப்படும் வரி
ஒரு மருத்துவ மாணவரை உருவாக்க இந்நாட்டு மக்கள் நான்கு மில்லியன் ரூபாவை வரியாக செலவிடுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
5 வருட கல்வியை நிறைவு செய்ய
ஒரு மருத்துவ மாணவர் பல்கலைக்கழகத்தில் 5 வருட கல்வியை நிறைவு செய்ய, மக்கள் 4,092,915 ரூபாவை செலவு செய்கின்றனர்.இது மாதமொன்றிற்கு 68, 215 ரூபாய்” என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஒரு பொறியியல் பீட மாணவருக்காக 2.1 மில்லியன் ரூபாவும் முகாமைத்துவ மாணவனுக்காக 1 மில்லியன் ரூபாவும் கலைப்பீட மாணவனுக்கு 1.3 மில்லியன் ரூபாவையும் மக்கள் வரியாக வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்
அண்மைக்காலமாக இலங்கையிலிருந்து பெருமளவு வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.இது நாட்டின் சுகாதார துறையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
