சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் பயணிகளுடன் சென்ற முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றியது
Jaffna
Fire
By Erimalai
முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் சற்று முன்னர் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது
பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளும் சாரதியும் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளனர்
பாதையால் சென்றவர்களின் உதவி
முச்சக்கர வண்டி தீப்பற்றி எரிந்த நிலையில் பாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் முச்சக்கர வண்டியின் தீ பரவலை கட்டுப்படுத்தி ஓரளவு பாதுகாத்துள்ளனர்

குறித்த சம்பவம் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி