மட்டக்களப்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கி சென்ற வான் தீப்பற்றி எரிந்து நாசம்
மட்டக்களப்பு - மண்முனை பகுதியில் வான் ஒன்று திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
மட்டக்களப்பு - காத்தான்குடி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை – மண்முனை வீதியில் நேற்று (10.05.2026) இரவு சுமார் 7.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கொக்கட்டிச்சோலையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த வான் ஒன்றே இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பற்றியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
சம்பவத்தின் போது வானில் பயணம் செய்த அனைவரும் எந்தவித காயங்களும் இன்றி பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குத் தடயவியல் காவல்துறையினர் அழைக்கப்பட்ட நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்