சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Badulla
Sri Lanka Tourism
Weather
By Sumithiran
பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் நீராடுவதை தவிர்க்குமாறு மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடும் மழை காரணமாக நீர்வீழ்ச்சிகளில் வழமைக்கு மாறாக நீர் பெருகும் அபாயம் காணப்படுவதாக மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீராடுவதை தவிர்க்குமாறு
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் ஏனைய மக்கள் நீர்வீழ்ச்சிகளை சுற்றி நீராடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுவதாக பதுளை மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரவளை பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ராவணா நீர்வீழ்ச்சியில் நீர் வேகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரண அறிவித்தல்