நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிய சட்டம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் முறையான தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் புதிய சட்டம் ஒன்றினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (21) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் இந்த விடயம் தொடர்பில் அறிவித்திருந்தார்.
இந்த வாரம் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் தரம் குறித்து பலர் கேள்விகளை எழுப்புயுள்ளனர்.
நடத்தையை கண்காணிக்கும் ஆணையம்
இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயர் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்றும் அதனை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உருவாக்கி வருவதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
பல நாடுகளில் செயற்பாட்டில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தையை கண்காணிக்கும் ஆணையம் போன்றதொரு கட்டமைப்பு விரைவில் நியமிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
