மோட்டார் சைக்கிள்கள் மோதல் - பறிபோனது இளைஞனின் உயிர்
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர் .
வாத்துவ கல்லூரி வீதியில் இன்று (07) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
விபத்தில் உயிரிழந்தவர் வாத்துவ, தல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.
இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள்

இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி 25 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சுவரில் மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
தம்பதியும் படுகாயம்

மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.