ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை

Sri Lankan Tamils Festival Hinduism
By Theepachelvan Jul 16, 2024 05:29 PM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report

Courtesy: தீபச்செல்வன்

பண்பாட்டை மறந்த இனம் பூமியில் நிலைப்பதில்லை என்பார்கள். தனி மனிதன் வாழ்வியல் நெறிகளை அறியவும் தன்னை சமூகத்தில் இணைத்துக் கொள்ளவும் பண்பாடு வழி வகுக்கிறது.

உலகம் மிக நவீனத்துமடைந்து வருகின்ற காலத்தில் தொடர்பாடல் பன்முக வளர்ச்சியைப் பெற்று வருகின்ற காலத்தில் பண்பாடு தான் தனி மனிதனை சமூகமயமாக்கும் சாதனமாகவும் விளங்குகிறது.

ஈழத் தமிழர்களின் பண்பாடு சைவத்தோடும் தமிழோடும் இயற்கை நெறியோடும் கலந்தது. அத்தகைய பண்டிகைகளில் ஒன்றாக விளங்கும் ஆடிப்பிறப்பு (17.07.2024) இன்றாகும்.

மோசமான கொடிய பயங்கரவாத தடைச்சட்டம்… சிங்கள அமைச்சரே ஐ.நாவில் ஏற்றுக் கொண்ட உண்மை…

மோசமான கொடிய பயங்கரவாத தடைச்சட்டம்… சிங்கள அமைச்சரே ஐ.நாவில் ஏற்றுக் கொண்ட உண்மை…

ஆடிப்பிறப்பு பாடல்

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே!கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தெள்ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை | Aadippirappu Cultural Festival Of Eelam Tamils

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டு மாவுண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே குத்து விளக்குக் கொளுத்தி வைத்து அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

எனத் துவங்கும் நாவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் பாடல் தமிழ் ஈழச் சமூகத்தில் இரண்டக் கலந்த வாழ்வியல் பாடலாகும்.

வைத்தியர் அர்ச்சுனாவின் புரட்சி: சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்தது என்ன..

வைத்தியர் அர்ச்சுனாவின் புரட்சி: சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்தது என்ன..

ஈழத்தில் ஆடிப்பிறப்பு

ஆடிப்பிறப்பு நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள் தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள்.

இந்த முறையும் ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் பல வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து கொண்டாடினாலும் இதையெல்லாம் கொண்டாட முடியாத நிலையிலும் பல வீடுகள் வெளித்துக் கிடக்கும் காட்சிகளை கடந்த பதினைந்து ஆண்டுகளாக பார்த்து வருகின்றோம்.

ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை | Aadippirappu Cultural Festival Of Eelam Tamils

சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை தொடக்கம் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலம் எனப்படும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும்.

பின்னர், சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலம். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் ஆரம்ப தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும்.

இந்த காலம் கோடை கால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. வானியல், அறிவியல் பின்புலத்தை கொண்ட இந்தப் பண்டிகை இயற்கை சார்ந்த வழிபாடாகவும் பரிமாணம் பெறுகிறது.

நவாலி தேவாலயத்தில் புக்காரா விமானங்கள் நிகழ்த்திய இனப்படுகொலை….

நவாலி தேவாலயத்தில் புக்காரா விமானங்கள் நிகழ்த்திய இனப்படுகொலை….

தமிழ் நாட்டில் ஆடிப்பிறப்பு

தமிழகத்தில், இந்தநாளில் விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இந்த உணவு வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆடி மாதத்தில் ஆற்றுநீர் வளமுள்ள தென்னாட்டு மக்கள் காவிரி போன்ற ஆற்றங்கரைகளில் சித்திரான்னம் உண்டு படகோட்டம் போன்ற கேளிக்கைகளில் பங்கு பற்றும் இந்த நாளை 'ஆடிப்பெருக்கு' என்றும் அழைத்து பண்டிகையாகக் கொண்டாடுவர்கள்.

தற்காலத்திலும் தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில் ஆடிப்பெருக்கு கொண்டாடும் வழக்கம் இருந்து வருகிறது. “ஆடி விதை தேடி விதை ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் ஆடி ஆவணி ஆன புரட்டாதி காடி தோய்த்த கனபனங் காயத்தைத் தேடித் தேடித் தினமும் புசிப்பவர் ஓடி யோடி யுலகெலாம் பீச்சுவர்” இப்படி தமிழக பழைய பாடல்களில் எழுதப்பட்டுள்ளமை தமிழகத்தில் ஆடிப்பிறப்பிற்குள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.

ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை | Aadippirappu Cultural Festival Of Eelam Tamils

ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை... என்ற பாடல்தான் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஆடிப்பு நாளில் நினைவுக்கு வரும். இந்தப் பாடலை ஈழப் புலவர்களில் ஒருவரான நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடியுள்ளார்.

ஆடிப்பிறப்புக்கு ஒரு காலத்தில் விடுமுறைகள் விடுக்கப்பட்டுள்ளன. அந்தளவு முக்கியமான நாளாகஆடிப்பிறப்பு அமைந்துள்ளது.

அதாவது தை முதல் நாளையும் ஆடி முதல் நாளையும் ஈழத்தவர்கள் கொண்டாடுகின்றனர். ஒரு ஆண்டின் தொடக்கத்தையும் அரை ஆண்டின் தொடக்கத்தையும் கொண்டாடுகின்றனர். இங்கு முதல் அரையாண்டு தேவர்களுக்குரியது என்றும் இறுதி அரையாண்டு பிதிர்களுக்கு உரியது என்றும் ஒரு ஐதீகம் இருக்கிறது.

கற்கடகம் என்பது ஆடி மாத்தின் பழைய தமிழ் பெயராகும். ஆடி முதல் நாளை தமிழர்கள் வரவேற்கும் விழாவே ஆடிப்பிறப்பு. இப் பண்டிகையின் போது தேங்காய் சுடுதல் என்ற உணவுப் பழக்கமும் தமிழர்களிடம் காலம் காலமாக நிலவிவந்துள்ளது.

இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !

இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !

ஆடிப்பிறப்புக் கொண்டாட்டங்கள்

தேங்காய் நாரை முற்றிலும் உரித்துவிட்டு நன்றாக உருட்டியபின், தேங்காயின் 3முகங்களில் ஒன்றில் மட்டும் துளையிட்டு தேங்காய் நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்து கொள்ளவும்.

சிப்பருப்புடன், பொட்டுக்கடலை, எள்ளு, வெல்லம், சிறிதளவு உப்பிட்டு அரைத்தெடுத்து. தேங்காயின் ஒரு துவாரத்தின் வழியாக அடைத்து சிறிது தேங்காய் நீரை ஊற்றியபின் இதுவாரத்தை மஞ்சளிட்டு அடைத்து வாதனங் குச்சியை துவாரத்தில் சொருகி தேங்காயை தீயில் சுட்டபின் கடவுளுக்கு படைத்தபின் உடைத்து குடும்பத்துடன் சாப்பிடும் வழக்கம்.

ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை | Aadippirappu Cultural Festival Of Eelam Tamils

ஆடிப்பிறப்பன்று, வானவேடிக்கைகள், வோர்னில் விழகாக்கள், களியாட்ட நிகழ்வுகள், பட்டம் விடுதல் முதலிய நிகழ்வுகளில் ஈழத்தவர்கள் ஈடுபட்டதாக மூதாதையர்களின் நினைவுக்குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படுகிறது.

சிறுவர்களும் முதியவர்களும் இணைந்து கூடிக் கொண்டாடி மகிழும் ஒரு நிகழ்வாக ஆடிப்பிறப்புகாணப்படுகிறது. அத்தடன் ஈழக் கவிஞர் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடல் ஆடிப்பிறப்பின் கொண்டாட்டம், களியாட்டம், பண்பாட்டு முக்கியத்துவம், கலாசார செழிப்பு என்று பல்வேறு முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகிறது.

விடுதலையற்ற ஆடிப்பிறப்பு

இப்போது ஆடிப்பிறப்புக்கு விடுமுறை இல்லை. ஆடிப்பிறப்பு என்று மாத்திரம் வெறுமனே எமது நாட்காட்டிகள் நினைவுபடுத்துகின்றன. இப்போது விடுமுறையற்ற ஆடிப்பிறப்பு மாத்திரம் வருவதில்லை. விடுதலையற்ற ஆடிப்பிறப்புத்தான் வருகிறது.

விடுதலை பெறாத இனத்தின் எல்லாப் பண்டிகைகளும் கொண்டாடும் தன்மையை இழக்கின்றன. அத்துடன் கூடியிருந்தவர்களை இழந்து, கூடியிருந்தவர்களுக்காக காத்திருக்கும் துயரச் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ள ஈழத்தில் இந்த ஆடிப்பிறப்பு வேதனையை தோற்றுவிக்கும் நாளாகவும் ஆகிவிட்டதையும் நாம் இங்கு கவனம் கொள்ள வேண்டும்.

ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை | Aadippirappu Cultural Festival Of Eelam Tamils

ஆடிப்பிறப்புக்கு விடுமுறை வழங்கப்பட்ட செயற்பாடு ஏன் வழக்கொழிந்தது? இது ஆராயப்பட வேண்டியது. மீண்டும் ஆடிப்பிறப்பு விடுமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் ஆடிப்பிறப்பின் போது கொண்டாட்ட நிகழ்வுகளை பாடசாலைகளிலும், பொதுவிடயங்களிலும் வடமாகாண பண்பாட்டு திணைக்களம் ஏற்பாடு செய்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனினும் ஆடிப்பிறப்பு போன்ற பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க தினங்களை அரச விடுமுறை தினங்களாக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த வேண்டும்.

வடகிழக்கில் இந்த நடைமுறையைக் கொண்டுவருவதன் மூலம் காயப்பட்ட ஈழ மக்கள், தமது பாரம்பரிய பண்பாட்டு தினங்களை கொண்டாடி உளத்தை வலுப்படுத்தவும் ஆற்றவும் முடியும். பண்டிகை நாட்களில் மனதில் பெரும் மகிழச்சியோடு, உறவுகள் கூடியிருப்பதுதான் மகிழச்சியையும் கொண்டாட்டதையும் புது தொடக்கத்தையும் தருகிறது.

பண்பாட்டு அழிப்புக்களுக்கும் கலாசார நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ள ஈழத் தமிழ் இனம் ஆடிப்பிறப்பு போன்ற பாரம்பரிய பண்டிகை தினங்களை கொண்டாடி தமது கலாசார, பண்பாட்டு தடத்தை வலுப்படுத்த வேண்டும்.

இனவழிப்புப் பொறிகள் நிறைந்த மண்ணில் இத்தகைய பண்பாட்டு பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் இன்றைய தலைமுறையை வலுப்படுத்துபவை.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 16 July, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

செட்டிக்குளம், Toronto, Canada

14 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை தெற்கு, டோட்மண்ட், Germany

15 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், யாழ்ப்பணம், Victoria, BC, Canada

17 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், யாழ்ப்பாணம், பூவரசங்குளம், வவுனியா

16 Aug, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், அளவெட்டி

13 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
மரண அறிவித்தல்

வத்திராயன் தெற்கு, மருதங்கேணி தெற்கு

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Kirchheim Unter Teck, Germany

16 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Markham, Canada

16 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

07 Sep, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Melbourne, Australia

27 Sep, 2023
நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

சுன்னாகம், இரத்தினபுரி, கொழும்பு, தெல்லிப்பழை, Vaughan, Canada

10 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022