தமிழர் பகுதியில் அநாதரவாக மீட்கப்பட்ட கார் - பின்னணியில் கொள்ளை சம்பவம்
கிளிநொச்சி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட திருவையாறு இரண்டாம் பகுதியில் நேற்று (11.05.2026) அதிகாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வாகனம் மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் நீண்ட நேரமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்ததை அவதானித்த பிரதேச மக்கள், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மேலதிக விசாரணை
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், வாகனத்தை கைப்பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த வாகனம் வடக்கு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு கொள்ளைச் சம்பவம் அல்லது ஏதேனும் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |