மில்லியன் கணக்கான டொலர் பரிசு போட்டியில் கோட்டாபய தொடர்பான கேள்வி..!
சர்வதேச தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய போட்டியொன்றில் கோட்டாபய ராஜபகச தொடர்பாக பேசப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ABC தொலைக்காட்சி நடத்திய கேள்வி-பதில் ரியாலிட்டி நிகழ்ச்சி(reality show) போட்டியொன்றில், மில்லியன் கணக்கான டொலர்களை வெல்வதற்கான கேள்வியொன்றில் சிறிலங்கா முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தொடர்பான கேள்வியொன்று கேட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதற்கமைய, “2022ஆம் ஆண்டில் மக்கள் போராட்டத்தால் ஒரு நாட்டின் அதிபர் பதவி விலகியதாகவும், அவர் இந்தியப் பெருங்கடலைக் கடந்து மாலைத்தீவுக்கு தப்பிச் சென்றதாகவும், அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்” எனவும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
பதிலளித்த போட்டியாளர்கள்

இதன்போது, போட்டியாளர்களில் இருவர் இலங்கை என்று பதிலளித்ததாகவும், மற்ற போட்டியாளர்களால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
குறித்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றிலேயே இந்தக் கேள்வி கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.