காவல் வீதித் தடையை மீறி சென்ற வாகனம்: துப்பாக்கி சூட்டில் முறியடிக்கப்பட்ட கடத்தல் முயற்சி - இளம் பெண் மீட்பு
கொழும்பில் கடத்தப்பட்ட இளம் பெண் ஒருவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (29-08-2026) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நாரஹேன்பிட்டி, நாவல வீதியிலுள்ள காவல் வீதித் தடையை மீறி செல்ல வாகனம் ஒன்று முற்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் வாகனத்தையும் பெண்ணையும் கைவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குறித்த பெண் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தப்பிச் சென்ற நபர்களை கைது செய்யும் விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |