மூன்றாவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்து தமிழர் பகுதியை சேர்ந்தவர் உயிரிழப்பு!
Vavuniya
Sri Lanka
Sri Lanka Police Investigation
Accident
By Pakirathan
மூன்றாவது மாடியிலிருந்து இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கொழும்பிலுள்ள வேலைத்தளம் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியாவை சேர்த்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கான காரணம்

குறித்த நபர், கொழும்பிலுள்ள வேலைத்தளமொன்றில் மின்னிணைப்பு வேலையில் பணியாற்றி கொண்டிருந்தபோது மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் வவுனியா, குட்செட் வீதியினை சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி