கொழும்பில் காவல்துறையினரை அச்சுறுத்திய அர்ச்சுனா! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கடமையில் இருந்த காவல்துறை அதிகாரியை அச்சுறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது
அதன்படி, குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு புறக்கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவை கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே நேற்று (25.09.2025) பிறப்பித்துள்ளார்.
கடமைகளுக்கு இடையூறு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடமையில் இருந்த கோட்டை காவல்துறை அதிகாரி ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளவைித்ததாகக் கூறி, காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இராமநாதன் அர்ச்சுனா கோட்டை காவல்துறையில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக பலவந்தமாக அதிகாரத்தை பயன்படுத்தியதாகவும், மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தை மீறியதாகவும் கூறி, கோட்டை காவல்துறையினர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் B அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.
குறித்த சம்பவத்தின் திருத்தப்படாத காணொளிக் காட்சிகளைப் பெறுவதற்கு தொடர்புபட்ட தொலைக்காட்சி ஊடகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு செய்யப்பட்ட கோரிக்கைக்கு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
