மகிழ்ச்சியோடு ஏற்கிறேன்: சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை
தனக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பிரகாரம் எந்தவொரு உறுப்பினருக்கும் இவ்வாறான பிரேரணையை முன்வைக்க உரிமை உண்டு எனவும் அந்த உரிமையை தாம் மதிப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை
பிரேரணைக்கு முகங்கொடுக்கவுள்ளதாக தெரிவித்த மகிந்த யாப்பா அபேவர்தன, நம்பிக்கையில்லா பிரேரணையை மிகவிரைவில் விவாதிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வீதி பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட போது சபாநாயகர் அரசியலமைப்பை மீறியதாக குற்றம் சுமத்தி ஐக்கிய மக்கள் சகதி கட்சி இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்