நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதில் முக்கிய துறையாக விவசாயம்
இலங்கையின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதில் விவசாயம் முக்கிய துறையாக இருக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (UN FAO) பணிப்பாளர் நாயகம் கலாநிதி கூ தொங்யுவுக்கும் (Dr. Qu Dongyu இடையிலான சந்திப்பொன்று அதிபர் அலுவலகத்தில் நேற்று (19) நடைபெற்ற போதே அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை மக்களுக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை கூ தொங்யு இதன்போது பாராட்டினார்.
பணிப்பாளர் நாயகம் உறுதி
இதேவேளை புதிய சீர்திருத்தங்களினூடாக நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான அதிபரின் அர்ப்பணிப்புக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
அத்துடன் இந்த நெருக்கடியான சமயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் உணவு மற்றும் விவசாய அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என பணிப்பாளர் நாயகம் உறுதியளித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகத்திற்கு விளக்கமளிக்கப்பட்டது.
பலர் கலந்து கொண்டனர்
நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதில் விவசாயம் முக்கிய துறையாக இருக்கும் என அதிபர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு உணவு மற்றும் விவசாய அமைப்பின் பங்களிப்பையும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக அதிபர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான பணிப்பாளர் தினுக் கொழும்பகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |