பல கனவுகளோடு பறந்த குடும்பத்தின் இறுதி நொடி

United Kingdom World Air India
By Dhilak Jun 12, 2025 06:39 PM GMT
Report

பல வருட கனவுகளுடன் லண்டனில் புதிய வாழ்க்கையைத் தொடங்க புறப்பட்ட பிரதிக் ஜோஷி குடும்பத்தினர் எயார் இந்தியா விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவம் பலரிடமும் ஆழ்ந்த சோகத்தையும் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையையும் நினைவூட்டியுள்ளது.

பிரதிக் ஜோஷி, ஒரு மென்பொருள் நிபுணர், கடந்த ஆறு வருடங்களாக லண்டனில் வாழ்ந்துவருகிறார். தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இந்தியாவில் வசித்து வந்தனர்.

தீப்பிழம்புடன் விடுதிக்குள் புகுந்த விமானம் : மீட்கப்பட்டது இரண்டாவது பொக்கிஷம் - தொடரும் விசாரணை

தீப்பிழம்புடன் விடுதிக்குள் புகுந்த விமானம் : மீட்கப்பட்டது இரண்டாவது பொக்கிஷம் - தொடரும் விசாரணை

நீண்டகால கனவு

தனது குடும்பத்தையும் தன்னுடன் சேர்த்து, வெளிநாட்டில் ஒரு நல்ல வாழ்க்கையை வழங்க வேண்டும் என்பதே அவரது நீண்டகாலக் கனவாக இருந்தது.

பல கனவுகளோடு பறந்த குடும்பத்தின் இறுதி நொடி | Air India Crash Passenger Details

பல வருடங்களாக பல வருடங்களாக உரிய அனுமதிகளுக்காக காத்திருந்த பிறகு, அந்தக் கனவு இறுதியாக நனவாகியது.

அதனை தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு, உதய்பூரில் புகழ்பெற்ற மருத்துவரான அவரது மனைவி கோமி வியாஸ் தனது வேலையை விட்டு விலகி கனவுகளை நனவாக்க கிளம்பியிருந்தார்.

மனதை உருக்கும் கதைகள்: கதிகலங்க வைத்த விபத்து - மனைவியின் அஸ்தியை கரைக்க வந்த கணவன் பலி

மனதை உருக்கும் கதைகள்: கதிகலங்க வைத்த விபத்து - மனைவியின் அஸ்தியை கரைக்க வந்த கணவன் பலி

இறுதி செல்ஃபி

இந்த நிலையில், இன்று காலை, ஐந்து பேர் கொண்ட அந்த குடும்பம் எயார் இந்தியா விமானம் 171-ல் லண்டன் நோக்கி புறப்பட தயாராகியருந்தது.

பல கனவுகளோடு பறந்த குடும்பத்தின் இறுதி நொடி | Air India Crash Passenger Details

விமானத்தில் ஏறும் முன் எடுத்த செல்ஃபி ஒன்றை உறவினர்களுக்கு அனுப்பியிருந்தனர். ஆனால் அந்த ஒரு செல்ஃபி, அவர்கள் வாழ்கையின் கடைசி ஒற்றுமையான தருணமாக மாறியது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த மொத்த பயணிகளில் ஒருவரை தவிர யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.

இந்த துயரச் செய்தி வாழ்க்கை எவ்வளவு மோசமாகவும் எதிர்பாராதவிதமாகவும் திரும்ப முடியும் என்பதற்கான கடும் நினைவூட்டலாக அமைந்துள்ளது.

கலக்கத்தில் சர்வதேசம்: சிறிலங்கா எயார்லைன்ஸின் உருக்கமான பதிவு

கலக்கத்தில் சர்வதேசம்: சிறிலங்கா எயார்லைன்ஸின் உருக்கமான பதிவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி