வடமாகாணத்தில் இடம்பெறும் மனிதக்கடத்தல்

Bandaranaike International Airport Immigration
By Kathirpriya Aug 08, 2023 05:54 AM GMT
Report

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்லும் வகையில் வடமாகாணத்தில் பாரிய மனித கடத்தல் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக சிறிலங்கா குடிவரவு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களை கைது செய்வதற்காக பயிற்சி பெற்ற குடிவரவு எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக இவர் கூறியுள்ளார்.

போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களைக் கண்டறிவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மனித கடத்தல்

வடமாகாணத்தில் இடம்பெறும் மனிதக்கடத்தல் | All Those Looking To Go Abroad Sri Lanka Illegal

இதற்கமைய விமான நிலையத்தில் இரகசியமாக நிறுத்தப்பட்டிருந்த குடிவரவு எல்லை சேவை அதிகாரிகளினால் ஏழு பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெருபாலானோர் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய அவர், வடமாகாணத்தில் பாரிய மனித கடத்தல் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இவர்களில் பலர் கடத்தல் காரர்களுக்கு தலா 5 மில்லியன் பணம் வழங்கியுள்ளதாகவும் சிறிலங்கா குடிவரவு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படை

வடமாகாணத்தில் இடம்பெறும் மனிதக்கடத்தல் | All Those Looking To Go Abroad Sri Lanka Illegal 

சிறிலங்கா கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் கண்காணிப்பு காரணமாக பலர் தற்போது ஐரோப்பாவிற்கு செல்ல விரும்புவதாகவும், அதற்காக வான்வழி பாதையை நாடியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாய்லாந்து, இந்தோனேஷியா, மியன்மார், வியட்நாம், மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு ஆரம்பத்தில் பயணம் செய்த பலர், பின்னர் கடல் மார்க்கமாக ஐரோப்பாவிற்கு சென்றதாகவும் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டார்.

இதனால் சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்கள் இனி நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025