கங்கையில் நீராடச் சென்ற மாணவி உயிரிழப்பு! ஆசிரியை கைது
srilanka
death
ambalangod
By Vasanth
பலாங்கொடை, கல்தொட படகொட பிரதேசத்தில் வளவை கங்கையில் நீராடிக் கொண்டிருந்த மாணவி நிரீல் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வளவை கங்கையில் 15 மாணவ மாணவிகளுடன் நீராட சென்ற நிலையில், கல்தொட்ட பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவர்களை அழைத்து சென்ற ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பலாங்கொடை, தென்ன பிரதேசத்தை சேர்ந்த நிரோஷிகா குமாரி என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கல்தொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், நேற்று பிற்பகல் குறித்த மாணவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த மாணவி ஒருவர் அதனை கைப்பேசியில் காணொளி பதிவு செய்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி