தொல்பொருள் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்க திட்டம்
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட கண்டி இராச்சிய காலத்தைச் சேர்ந்த 6 தொல்பொருட்களை மீள நாட்டிற்கு கொண்டுவரும் வாய்ப்பு கிட்டியுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
2008 முதல் 2022 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், தொல்பொருள் பெறுமதி வாய்ந்த சுமார் ஆயிரத்து 400 இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பதற்கான முயற்சிகள்
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர், அது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து, குறித்த செயற்பாடுகளை கட்டுப்படுத்தியுள்ளோம்.
கிடைக்கப்பெறும் தகவல்களை அடிப்படையாக கொண்டு தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.
தொல்பொருள் தொடர்பான திருத்தச் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றில் முன்வைக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு ஒரு தொகையினை வழங்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்” என்றார்.