அமெரிக்க : இலங்கை ஒப்பந்தம் தொடர்பில் முக்கிய கூட்டம் (படங்கள்)
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தத்தின் (TIFA) 14வது சபை கூட்டம் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது இன்று (18) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை அரசின் சார்பில் சர்வதேச வர்த்தக அலுவலகத்தின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கே.ஜே, அமெரிக்கத் தரப்பில் இருந்து தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியான வீரசிங்க மற்றும் பிரெண்டன் லிஞ்ச் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
75வது ஆண்டு நிறைவு
பிரதிநிதிகள் குழுவில் வர்த்தகம், முதலீடு, சுங்கம், தொழிலாளர் உறவுகள், அறிவுசார் சொத்துரிமை, விவசாயம் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங் மற்றும் பதில் அதிபரின் செயலாளர் சாந்தனி விஜயவர்தன ஆகியோர் சந்திப்பை ஆரம்பித்து வைத்து உரையாற்றினர்.