அமெரிக்காவில் 20 கோடி மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்த நிலையில், கடும் குளிர் அதற்கு எதிராக திரும்பியுள்ளது.
அமெரிக்காவில் திடீரென உருவான வெடிகுண்டு சூறாவளி எனப்படும் குளிர்கால புயலால் நேற்று 15 லட்சம் பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனிபடர்ந்து சாலைகள் மூடப்பட்டு உள்ளன அதேவேளை விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மைனஸ் 48 டிகிரி செல்சியஸ்
டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ பகுதிகளில் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்தனர். அமெரிக்காவில் 20 கோடி பேருக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
வெப்பநிலை மைனஸ் 48 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கீழ் சென்றுள்ளது. குளிர்காற்றும் வீசி வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ மற்றும் சியாட்டில் சர்வதேச விமான நிலையங்கள் உள்பட விமான சேவை பாதிக்கப்பட்டு 5 ஆயிரம் அமெரிக்க விமானங்கள் நேற்று ரத்து செய்யப்படதுடன் , 7,600 விமானங்கள் காலதாமத்துடன் இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விடுமுறை கொண்டாட்டங்கள் ரத்து
மேலும், குளிர்கால புயலால் 15 லட்சம் பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, விடுமுறை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் இந்த ஆண்டும் களைகட்டாமல் போயுள்ளன என மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
