தினமும் 16 கோடி ரூபாய் செலவழிக்கும் அமெரிக்க கோடீஸ்வரர்!
அமெரிக்க கோடீஸ்வரர் பிரையன் ஜான்சன் என்பவர் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தினமும் 16 கோடி ரூபாய் செலவழிப்பதாக தெரிய வந்துள்ளது.
இவர் 3300 கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியானவர் என கூறப்படுகின்றது.
தன்னை இளமையாக காட்டி கொள்ள வேண்டும் என தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
111 மாத்திரைகள்
46 வயதான குறித்த நபர் தனது உடல் உறுப்புகள் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என தினமும் 111 மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாக தெரிய வருகின்றது.
மேலும் தனது டீன்-ஏஜ் மகனின் ரத்த பிளாஸ்மாவை எடுத்து தனது உடலில் செலுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
கொலாஜன், ஸ்பெர்மிடின், கிரியேட்டின் போன்றவை அடங்கிய கிரீன் ஜெயன்ட் என்ற ஸ்மூத்தியை தினசரி உட்கொள்ளும் அவர், உடல் கொழுப்பு பரிசோதனை, எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற மருத்துவ உபகரணங்களுடன் தம்மை கண்காணித்துக் கொள்ள 30 பேர் கொண்ட மருத்துவக் குழுவையும் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது சொகுசு காரை தனது உடல் அதிரக் கூடாது என்பதற்காக மணிக்கு வெறும் 16 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்குவதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.