இனவாதத்தை தூண்டும் சாணக்கியன் : அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றச்சாட்டு (காணொளி)

Batticaloa Shanakiyan Rasamanickam Sri Lanka Eastern Province Ampitiye Sumanarathana Thero
By Eunice Ruth Nov 03, 2023 06:36 PM GMT
Report

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்ட தொடர்ந்தும் முயற்சிப்பதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்துக்குள்ளும் அதன் வெளியிலும் பேசாது அமைதி காப்பதாக இன்று (03) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்து்டன், தமிழர்களுக்கு எதிராக தாம் வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் வருந்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது தாயின் சமாதி உடைக்கப்பட்டதையறிந்து சில வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை தாம் மனதாற கூறவில்லை என அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இனவாதத்தை தூண்டும் சாணக்கியன் : அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றச்சாட்டு (காணொளி) | Ampitiye Sumanarathana Thero Against Rasamanickam

தாய்லாந்துடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை : ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு (படங்கள்)

தாய்லாந்துடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை : ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு (படங்கள்)

காவல்நிலையத்தில் முறைப்பாடு

மட்டக்களப்பு ஜயந்திபுர மற்றும் விஜயபுரவில் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மயானத்தை கனரக இயந்திரம் கொண்டு சுத்தப்படுத்தியமை தொடர்பில் கடந்த 21 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் தாம் காவல்நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினர் அக்கறை கொள்ளவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

காவல்துறையினரின் அலட்சியம் காரணமாக தாம் குறித்த மயானம் உள்ள இடத்துக்கு சென்றிருந்ததாகவும், இதன் போது மயானத்தில் இருந்த தனது தாயின் சமாதியை அழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக ஆக்ரோஷமடைந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இனவாதத்தை தூண்டும் சாணக்கியன் : அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றச்சாட்டு (காணொளி) | Ampitiye Sumanarathana Thero Against Rasamanickam

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : மைத்திரியின் அதிரடி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : மைத்திரியின் அதிரடி அறிவிப்பு

கடமை தவறிய காவல்துறையினர்

இதன் போது, கடமை தவறிய காவல்துறையினரை தாம் தூற்றியதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும், கிழக்கில் வாழும் கிறிஸ்தவ, முஸ்லீம் மற்றும் இந்து மக்களுக்கான மயானங்கள் அழிக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், தாம் தமிழ் மக்களுக்கு எச்சரித்ததாக பலர் கூறுவதாகவும், தாம் அவ்வாறான எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிங்கள மக்களின் மயானங்கள் அழிக்கப்படுகின்றமை தொடர்பில் யாரும் அக்கறை கொள்வதாக தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026