கொழும்பு மெகசின் சிறையில் கைதி ஒருவர் பலி - சிறை அதிகாரிகள் கைது
கொழும்பு மெகசின் சிறையில் கைதிகளுக்கும் சிறை அதிகாரி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் கைதி ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (27.04.2026) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர், போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த 37 வயதுடையவர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிறை அறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதிகளை, சிறைக் காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தியபோது ஏற்பட்ட கைகலப்பில், மூவரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், கொழும்பு 14, நவகம்புரத்தைச் சேர்ந்த 37 வயதான நபர் ஆவார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரி மற்றும் காவலர் உள்ளிட்ட இரு பொரள்ளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொரள்ளை காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |