தமிழகத்தில் ஏப்ரல் 6 சட்டசபை தேர்தல்! மே 2 வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் திகதி சட்டசபை தேர்தல் நடைபெறும், வாக்கு எண்ணிக்கை மே 2-ந் திகதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். இதற்கான தேர்தல் அட்டவணையை அவர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 88936 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்படுகின்றது.
தமிழகத்தின் 234 தொகுதிகளில் 44 தனித் தொகுதிகள், 2 பழங்குடியினர் தொகுதிகள் உள்ளன. 5 மாநிலங்களின் 824 தொகுதிகளில் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் தேர்தல் முடிவுகளை அறிய, வாக்குப்பதிவு நடைபெற்ற பிறகு, கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 6ல் வாக்குப்பதிவு நடைபெற்று, மே 2ல் ரிசல்ட் அறிவிக்கப்படும் என்று அறிவித்திருப்பது தமிழக அரசியல் காட்சிகளை மிகுந்த அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. ஏனெனில், தமிழக கட்சிகள், வாக்குப்பதிவு நடைபெற்று 10 நாட்களுக்குள் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தன.
ஆனால், தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கையை நிராகரித்து ஒரு மாதம் வரை முடிவுக்கு காத்திருக்க வைத்துவிட்டது.