மலையக மக்களுக்கு எச்சரிக்கை: காலநிலை தொடர்பில் விசேட அறிவிப்பு!
நாட்டில் எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் மழையுடனான வானிலை நிலவும் என்பதால் மலையகத்தில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
“டித்வா“ சூறாவளியுடன் தொடர்புடைய கனமழை, மலைப்பகுதிகளில் மண்ணின் கீழ் அடுக்குகளை நனைத்து, பல இடங்களில் தரையில் விரிசல்களை ஏற்படுத்தியிருப்பதால் எதிர்வரும் சில நாட்களில் கனமழை பெய்தால், மீண்டும் கடுமையான ஆபத்து ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
இதன்காரணமாக, மலைகளின் அபாயப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

அண்மைய வானிலை அறிக்கைகளின் அடிப்படையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் சில நாட்களில் தீவில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும் எனவும் டிசம்பர் 4 ஆம் திகதி முதல் நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |