அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை : அநுரவுடன் அவசர சந்திப்பு கோரும் தமிழரசுக்கட்சி

Anura Kumara Dissanayaka President of Sri lanka ITAK Kaveenthiran Kodeeswaran
By Sathangani Sep 24, 2026 05:56 AM GMT
Report

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள 26 வயதான சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதன்படி, அனோஜனுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுத்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பை நடத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பில், செப்டெம்பர் 22 ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள தமிழரசுக் கட்சி, அனோஜனின் விடுதலைக்காக கிடைக்கக்கூடிய அனைத்து இராஜதந்திர வழிமுறைகளையும் அவசரமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

அனோஜனின் விடுதலை : தமிழரசுக்கட்சி எடுத்துள்ள நடவடிக்கை

அனோஜனின் விடுதலை : தமிழரசுக்கட்சி எடுத்துள்ள நடவடிக்கை

தமிழரசுக் கட்சி நியமிப்பு 

மேலும் அந்தக் கடிதத்தில், வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்த சவுதி அரேபியாவுக்கான பிரதிநிதிகள் குழுவில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரனை கட்சியின் பிரதிநிதியாக தமிழரசுக் கட்சி நியமித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள இராஜதந்திரத் தூதரகங்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.

அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை : அநுரவுடன் அவசர சந்திப்பு கோரும் தமிழரசுக்கட்சி | Anojana Facing Death Penalty In Saudi Itak Anura

இதன்போது, சிவராசா அனோஜனின் வழக்கு தொடர்பில் தமக்குத் தெரிந்துள்ள தகவல்களை விளக்கி, அவருக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுத்து விடுதலை செய்வதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக கட்சி தெரிவித்துள்ளது.

தமிழரசுக் கட்சியுடன் நெருக்கமாகச் செயற்படும் புலம்பெயர் அமைப்புகளும், தாங்கள் செயற்படும் நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை அணுகி, அனோஜனின் வழக்கில் இராஜதந்திர மற்றும் மனிதாபிமான ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனோஜன் விவகாரத்தில் புதிய திருப்பம் : உதவ முன்வந்துள்ள முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி

அனோஜன் விவகாரத்தில் புதிய திருப்பம் : உதவ முன்வந்துள்ள முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி

அனுப்பப்பட்டுள்ள கடிதம் 

இராஜதந்திரத் தூதரகங்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடனான தொடர்புகளின் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் அவசரமாகப் பரிசீலிக்க வேண்டிய மேலதிக இராஜதந்திர வழிமுறைகள் மற்றும் முன்மொழிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

இந்த முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் நேரடியாக முன்வைக்க விரும்புவதாகவும், சவுதி அரேபிய அதிகாரிகளுடனான இலங்கையின் ஈடுபாடுகளுக்கு ஆதரவளிக்கக்கூடிய நட்பு நாடுகளின் உதவியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளையும் பரிசீலிக்க வேண்டும் எனவும் கட்சி தெரிவித்துள்ளது.

அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை : அநுரவுடன் அவசர சந்திப்பு கோரும் தமிழரசுக்கட்சி | Anojana Facing Death Penalty In Saudi Itak Anura

அரசாங்கம் ஏற்கனவே முன்னெடுத்து வரும் தூதரக மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளுடன் இணைந்து, ஒருங்கிணைந்த உயர்மட்ட இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுத்து, அவர் பாதுகாப்பாக விடுதலை செய்யப்படுவதற்கான அனைத்து சாத்தியமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தமது தெளிவான நோக்கம் என தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த நோக்கத்தை அடைவதற்காக ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சு, இராஜதந்திரப் பங்காளிகள், புலம்பெயர் அமைப்புகள் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினருடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனோஜனை விடுதலை செய்ய கோரி வவுனியாவில் நடைபவனியும் கையெழுத்து இயக்கமும்..!

அனோஜனை விடுதலை செய்ய கோரி வவுனியாவில் நடைபவனியும் கையெழுத்து இயக்கமும்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023