இலங்கையில் மீண்டும் வரிசை யுகம் தலையெடுக்கும் : ரங்கே பண்டார எச்சரிக்கை

Ranil Wickremesinghe Sri Lanka Economy of Sri Lanka
By Beulah Oct 24, 2023 03:58 PM GMT
Report

வங்குரோத்து அடைந்திருக்கும் நாட்டை அதில் இருந்து மீட்பதற்கு அதிபர் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

சாணக்கியனின் நடவடிக்கையால் பீதியடைந்த தேரர்! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

சாணக்கியனின் நடவடிக்கையால் பீதியடைந்த தேரர்! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

 சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் உதவி

“அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் அனுபவம் மற்றும் சர்வதேச நாடுகளுடன் இருக்கும் தொடர்புகள் மூலம் பாெருளாதார நெருக்கடியை போக்கிக்கொள்ள உதவிகளை பெற்று வருகிறார்.

இலங்கையில் மீண்டும் வரிசை யுகம் தலையெடுக்கும் : ரங்கே பண்டார எச்சரிக்கை | Another Economic Crisis Sl Rank Bandara

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்காக நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் முடிந்தளவு பூரணப்படுத்தி இருக்கிறது.

அதில் இடம்பெற்ற சில குறைபாடுகள் காரணமாக இரண்டாம் கட்ட உதவியை பெற்றுக்கொள்வதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.

இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அதற்கான இணக்கப்பாடு தற்போது ஏற்பட்டிருக்கிறது.

நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட உதவி இலங்கைக்கு வழங்குவதற்கு நாணய நிதியத்தின் செயற்குழு சபை மட்டத்தில் இணக்கப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக நாணய நிதியத்தின் பேச்சாளர் பீடர் புறூக் தெரிவித்திருக்கிறார்.

எனவே இந்த உதவிகள் கிடைக்கப்பெற்று, பொருளாதார நிலைமை படிப்படியாக சரி செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

நாடு வங்குரோத்து நிலைக்கு செல்ல அதிபர் காரணமில்லை. வங்கு அடைந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்பவே ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றார்.

அதனால் மக்கள் பொருளாதார நெருக்கடி நிலையில் இருக்கும் இந்த சந்தரப்பத்தில் மின் கட்டணம் மற்றும் ஏனைய கட்டண அதிகரிப்புகள் தாங்க முடியாத சுமையாகும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

இருந்தபோதும் குறுகிய காலத்துக்காவது இதனை பொறுத்துக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் மீண்டும் கடந்த வருடத்தில் இடம்பெற்றதைப்போல் எரிபொருள், எரிவாயு பெறுக்கொள்ள வரிசையில் இருக்கவேண்டிய நிலை ஏற்படும்.”என்றார்.


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021