அனுரவின் கட்சி பிளவுபடும்! மொட்டு கட்சி ஆரூடம்
அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakke) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி விரைவில் பிளவுபடும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே, ரோஹித அபேகுணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "முதலில் ஜே.வி.பியில் இருந்து விமல் வீரவன்ஸ வெளியேறினார்.
கட்சிக்கு இடையில் முரண்பாடு
அதன் பின்னர், சோமவன்ச அமரசிங்க சென்றார். இந்நிலையில், மற்றுமொரு குழு பிரிந்து சென்று முன்னிலை சோசலிசக் கட்சியை உருவாக்கியுள்ளது.
எனவே, விரைவில் தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு பிளவு ஏற்படும். அதேவேளை, ஜே.வி.பி. ஒரு வழியிலும், தேசிய மக்கள் சக்தி மற்றுமொரு வழியிலுமே பயணிக்கின்றன" என சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |