தேர்தலுக்கு பணத்தை வாரி இறைக்கும் அனுர: சஜித் தரப்பு எழுப்பியுள்ள கேள்வி

Anura Kumara Dissanayaka Risad Badhiutheen Sajith Premadasa Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Dhilak Sep 03, 2024 12:44 PM GMT
Report

அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தலுக்காக கோடி கோடியாக பணம் கொட்டுகிறார், அப்படியான அனுரகுமாரவால் கடந்த காலத்தில் ஏன் ஒரு சின்ன உதவியாவது மக்களுக்கு செய்ய முடியாமல் போனது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.

வவுனியா (Vavuniya), வைரவ புளியங்குளத்தில் இன்று (03.09) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தொவித்ததாவது, “அன்று கோட்டபாய முஸ்லிம்களின் வாக்கை கொள்ளையடிக்க அலிசப்ரி என்ற ஒருவரை கொண்டு திரிந்தார். அவர் கோட்டபாயவை புகழ்ந்து வாக்கை கொள்ளையடித்தார்.

ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கும் 24 வீத சம்பள அதிகரிப்பு : சஜித் உறுதி

ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கும் 24 வீத சம்பள அதிகரிப்பு : சஜித் உறுதி


பிழையான வழிநடத்தல்

கடைசியில் எமது மையத்துக்களை எரித்துக் கொண்டிருந்த போதும், எம்மை சிறைக்குள் அடைத்த போதும் அமைச்சுப் பதவியை அலிசப்ரிக்கு கோட்டபாய வழங்கினார்.

தேர்தலுக்கு பணத்தை வாரி இறைக்கும் அனுர: சஜித் தரப்பு எழுப்பியுள்ள கேள்வி | Anura Pouring Crores Of Money For Elections Rishad

அது போலவே அனுரவும் தொப்பி போட்ட முஸ்லிம் மௌலவி ஒருவரை கூட்டிக் கொண்டு திரிந்து வாக்கை கொள்ளையடிக்கப் பார்க்கிறார்.

அவர் முஸ்லிம் இளைஞர்களை பிழையாக வழிநடத்த முயல்கிறார். முஸ்லிம் தலைமைகளைப் பற்றி பேசுகிறார். நாம் என்ன செய்தோம் என்று அந்த மௌலவி கேட்கின்றார்.

நாம் என்ன செய்தோம் என்பதை எமது மக்களிடம் கேட்டுப் பாருங்கள். பல அபிவிருத்திகளையும், மீள்குடியேற்றத்தையும் செய்ததுடன் வேலைவாய்ப்புக்களையும் வழங்கியுள்ளோம்.

எமது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் ஒருவரை ஒருவர் அரவணைக்கும் வகையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளோம்.

சம்பள உயர்வு - பதவி உயர்வு

ஆகவே பொய்களை நம்பாதீர்கள். அதேபோல், ரணில் விக்ரமசிங்கவின் பணத்திற்காக சோரம் போய் விடாதீர்கள். இந்த மாவட்டத்தில் 4 வருடமாக இராஜாங்க அமைச்சராக இருப்பவர் மக்களுக்கு ஒன்றுமே செய்யாது சோறு பார்சலும் கொடுத்து 2000 ரூபாய் காசும் கொடுத்து மக்களை அழைத்து கொண்டு திரிகிறார்.தருவதை வாங்குங்கள். வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு போடுங்கள்.

தேர்தலுக்கு பணத்தை வாரி இறைக்கும் அனுர: சஜித் தரப்பு எழுப்பியுள்ள கேள்வி | Anura Pouring Crores Of Money For Elections Rishad

தபால் மூல வாக்களிக்கும் போது அரச உத்தியோகத்தர்கள் சிந்தித்து வாக்களியுங்கள். உங்களுக்கான சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் எமது ஆட்சியில் நடைபெறும்.

எதிர்வரும் 21 ஆம் திகதி சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்து இந்த நாட்டை மீட்டு எடுக்க அனைவரும் அணிதிரள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

சஜித்திற்கு எதிராக களமிறக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளர்: முன்னாள் பிரதி அமைச்சர் சாடல்

சஜித்திற்கு எதிராக களமிறக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளர்: முன்னாள் பிரதி அமைச்சர் சாடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025