ஈஸ்டர் விவகாரத்தில் கைது வளையத்துக்குள் இழுக்கப்படும் மூன்று இராணுவ அதிகாரிகள்
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக எதிர்காலத்தில் ஒன்று அல்லது இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்திருந்தார்.
குறித்த விடயத்தை அமெரிக்காவில் (United States) வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதில் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இது தொடர்பில் பல சிஐடி அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், பல முன்னாள் இராணுவ அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஜனாதிபதி தெரித்திருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்படவுள்ள முக்கிய சூத்திரதாரிகள், முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் அடுத்த கட்ட விசாரணை நகர்வு மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
