யாழில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட பெருமளவு குண்டுகள்
யாழில் (Jaffna) வெடிக்காத நிலையில் குண்டுகள் இனங்காணப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மருதங்கேணி காவல் பிரிவுக்கு உட்பட்ட மண்டலாய் பகுதியில் இவ்வாறு குண்டுகள் இணங்காணப்பட்டுள்ளது.
கோவில் வயல் தனியார் காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் மூன்று பகுதிகளில் குண்டுகள் இனங்காணப்பட்டுள்ளது.
காணிக்குள் குண்டுகள்
மண்டலாய் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய காணியில் துப்புரவு பணியை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, குறித்த காணிக்குள் குண்டுகள் காணப்படுவதை அவதானித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவம் குறித்து உடனடியாக மருதங்கேணி காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
பாதுகாப்பான முறை
இதன்பின்பு, சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த மருதங்கேணி காவல்துறையினர் விரைந்து சென்று குறித்த பகுதியை உடன் பாதுகாப்பான பகுதிக்குள் கொண்டுவந்துள்ளனர்.
காணிக்குள் காணப்பட்ட அனைத்து குண்டுகளும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவை தற்போது 81-2,RPG _ 2 ,60 _ 3 ,Dompa 1 என ரக குண்டுகள் என இனங்கானப்படுள்ளன.
மேலும், இன்றைய தினம் (04) நீதிமன்ற அனுமதியின் பின் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
